search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமாகந்த் அச்ரேக்கர்"

    தன்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கி வளர்த்தெடுத்த தனது பயிற்சியாளருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சச்சின் தோளில் சுமந்து சென்றார். #SachinTendulkar
    மும்பை:

    பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் ஆஸ்தான குருவான அச்ரேக்கர், ஜனவரி 2 புதன்கிழமை உயிரிழந்தார். 87 வயதான அச்ரேக்கர், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் தன்னை உருவாக்கி வளர்த்தெடுத்த குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சச்சின் சுமந்து சென்றார். குருவிற்கு சச்சின் செலுத்திய மரியாதை ரசிகர்களுக்கு அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.



    கிரிக்கெட் என்றாலே உலகளவில் அனைவருக்குமே சட்டென நினைவுக்கு வரக்கூடிய பெயர்களில் முதன்மையானது சச்சின் தெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.



    சச்சினின் 11ஆவது வயதில், அச்ரேக்கர் அறிமுகமானார். பிரவீன் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து போன்ற வீரர்களுக்கும் அச்ரேக்கர், பயிற்சியளித்த போதிலும், துரோணாச்சாரியார் விருது பெற்ற அச்ரேக்கருக்கு, அர்ஜுனன் போன்ற திறமையான சீடர், சச்சின் தெண்டுல்கர் தான்.



    ஒருமுறை பயிற்சியில் ஈடுபடாமல், அரட்டையடித்துக்கொண்டிருந்த சச்சினை பார்த்த அச்ரேக்கர், கன்னத்திலேயே பளார் விட்டு, பயிற்சிக்கு போகச்சொன்னாராம். இதை தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சினே குறிப்பிட்டுள்ளார். #SachinTendulkar #RamakantAchrekar
    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளரான ராமாகந்த் அச்ரேக்கர் 87-வது வயதில் இன்று காலமானார். #SachinTendulkar
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.



    இவர் சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இவரை சச்சின் எந்த நேரத்திலும் குறிப்பிட மறந்ததில்லை. சச்சின் தெண்டுல்கருக்கு பயிற்சியளித்ததற்காக மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார்.

    87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையின் இன்று காலமானார்.
    ×